இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்க கூட்டமைப்பு: 2 நாள் மாநாட்டை துவங்கி வைத்த முதலமைச்சர்

சென்னையில், இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்க கூட்டமைப்பான கிரடாய் சார்பில் நடைபெற்ற ஸ்டேட்கான் 2021 என்ற 2 நாள் மாநாட்டை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் வருவாயில் 18.3விழுக்காடு கட்டுமானத்துறை மூலமாகத் தான் கிடைக்கிறது என்றார்.
கட்டுமான திட்டங்களுக்கு ஒற்றை சாளர முறையில் விண்ணப்பித்த 60 நாட்களில் ஒப்புதல் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
கட்டுமான தொழில் தொடர்பான சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளவும், மறுஆய்வு செய்யவும் அரசு தயாராக உள்ளது என்ற முதலமைச்சர், 2031 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற திட்டமிடபட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
Comments