13 பேரை பலி கொண்ட குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து ; விபத்து நிகழ்ந்த இடத்தில் தென் மண்டல ராணுவ தளபதி ஆய்வு

0 2116
விபத்து நிகழ்ந்த இடத்தில் தென் மண்டல ராணுவ தளபதி ஆய்வு

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரை பலி கொண்ட குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, சம்பவ நிகழ்ந்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில் தென்மண்டல ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அருண் ஆய்வு செய்தார்.

மேலும், மீட்பு பணிக்கு உதவிய கிராம மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அத்தோடு, விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் கலந்துரையாடி விசாரணை மேற்கொண்டதோடு, அந்த பகுதி மக்களுக்கு அரிசி உட்பட பல்வேறு உதவி பொருட்களையும் வழங்கினார்.

முன்னதாக, வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில், விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய அவர், சம்பவத்தன்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய்த்துறையினர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments