பாஜக பெண் எம்பிக்கள் குறித்து ஆபாச பேச்சு.? சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் மீது FIR

0 1566

பாஜக பெண் எம்பிக்கள் குறித்து ஆட்சேபிக்கும் வகையில் பேசியதாக சிவசேனா மாநிலங்களவை எம்பியான சஞ்சய் ராவத்தின் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மராத்தி டிவி பேட்டி ஒன்றில் பாஜக பெண் எம்பிக்கள் குறித்து மோசமான வார்த்தைகளில் அவர் பேசியதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தீப்தி ராவத் பரத்வாஜ் அளித்த புகாரின் பேரில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த பேட்டியில் பாஜகவினரின் கை கால்களை உடைப்பேன் என்ற வகையில் சஞ்சய் ராவத் பேசியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து பதிலளித்துள்ள சஞ்சய் ராவத், அது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments