புழல் சிறையில் கைதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் ; மாதவரம் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் கைதியின் உடல் மறுபிரேத பரிசோதனை

0 1286
மாதவரம் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் கைதியின் உடல் மறுபிரேத பரிசோதனை

சென்னை புழல் சிறையில் கைதி மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், கைதியின் உடல் மாதவரம் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

சீனிவாசன் என்ற அந்த கைதி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 9-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சீனிவாசனின் மனைவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி, மாதவரம் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெய்சங்கர் முன்னிலையில் சீனிவாசனின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. சீனிவாசன் மரணம் தொடர்பாக புழல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments