சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 6-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கும் என அறிவிப்பு

0 2679

சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 6-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாகவும், புத்தக கண்காட்சி ஜனவரி 23-ம் தேதி வரை நடைபெறும் என்றும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இம்முறையும் மொத்தம் 800 அரங்குகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments