கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 7076

வடகிழக்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 17-ந் தேதி தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45கிலோ மீட்டர் வேகம் வரையில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 5 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments