அச்சுறுத்தும் ஒமிக்ரான்: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையா?

0 3374

ஒமிக்ரான் அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை வழங்கலாமா அல்லது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் இறையன்பு, துறைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா?, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பதா? வேண்டாமா? உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, பள்ளிகளில் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி இருப்பு ஆகியவை குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சில மாவட்டங்களில் பொது இடங்களில் வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments