திருச்சியில் கை விரல்கள் துண்டிக்கப்பட்டு இளைஞர் கொடூரமாக கொலை..  போலீசார் விசாரணை.!

0 3913

திருச்சி திருவெறும்பூர் அடுத்த மாவடிகுளத்தில் கை விரல்கள் துண்டிக்கப்பட்டு இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஆட்டோவில் சென்று கொண்டிருந்த பெலிக்ஸ் ஜான்சனை மர்ம நபர்கள் விரட்டி வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பொன்மலைப்பட்டி கடைவீதியில் சின்ராசு என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக பெலிக்ஸ் ஜான்சனின் அண்ணன் அலெக்ஸ் சிறையில் அடைக்கப்பட்டதால், அதற்கு பழிக்கு பழி வாங்கும் சம்பவமாக பெலிக்ஸ் ஜான்சன் கொலை செய்யப்பட்டார என விசாரித்து வருவதாக் போலீசார் தெரிவித்தனர். 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments