ஜம்மு-காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கொல்லப்பட்டதாக போலீஸார் தகவல்.!

0 1745

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அவந்திபோராவில் உள்ள பாரகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது மறைந்திருந்த தீவிரவாதி தாக்கியதைத் தொடர்ந்து ராணுவத்தினரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், பாரகாமில் வசிக்கும் சமீர் அகமது தந்த்ரே எனவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments