சீனாவின் உதவியுடன் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் பாகிஸ்தான்

0 2052

சீனாவின் உதவியுடன் AIP ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டும் பணியை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சீனாவின் உதவியுடன் 3 பில்லியன் டாலர் மதிப்பில் டீசலால் இயங்கும் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை 2028 ம் ஆண்டு கட்டி முடிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதற்காக சீனாவின் வூகான் கப்பல் கட்டும் தளத்தில் ஏற்கனவே 4 நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது கராச்சியில் மேலும் 3 நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டுமானப் பணியை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.

77.6-மீட்டர் நீளமுள்ள நீர்மூழ்கிக் கப்பலானது, 3,600 டன்கள் எடை கொண்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 6 டர்பிடோ ஏவுகணைகளையும், பாபர் 3 என்ற அணு ஆயுதத்தையும் எடுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments