மும்பையில் ஆட்டோ ரிக்சா மீது மோதிய கார் சினிமா காட்சி போல் சாலையில் சில அடி தூரத்திற்கு உருண்டு விழுந்த சிசிடிவி காட்சி.!
நவி மும்பையில் ஆட்டோ ரிக்சா மீது மோதிய கார் சினிமா காட்சி போல் சாலையில் சில அடி தூரத்திற்கு உருண்டு விழுந்த மெய் சிலிர்க்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
பெலாபூர் சாலையில் தாறுமாறாக ஓடிய கார், சிக்னலுக்காக காத்திருந்த ஆட்டோ ரிக்சா மீது மோதியது. மோதிய வேகத்தில் சில அடி தூரத்திற்கு உருண்டு சென்று கார் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Comments