சோமாலியாவில் பருவ மழையின்மை காரணமாக ஏற்பட்ட வறட்சியால் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 35 லட்சம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு.!

0 1653

சோமாலியாவில் பருவ மழையின்மை காரணமாக ஏற்பட்ட வறட்சியால் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 35 லட்சம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அங்கு பருவமழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி நிலவுவதாகவும், சோமாலிய மக்கள் தொகையில் 30 சதவீதம் பேருக்கு அன்றாட உணவு கூட அடுத்த ஆண்டு மே மாதவாக்கில் கிடைப்பது சந்தேகம் என அதிகாரிகள் தெரிவித்தனர். உணவு பற்றாக்குறையால் அவசர நிலைய பிரகடனப்படுத்திய சோமாலிய அரசு, உலக நாடுகளிடம் உதவிகளை கோரியுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments