சபரிமலை யாத்திரையை முடித்துக்கொண்டு சடலத்துடன் காரில் திரும்பிய பக்தர்கள்.. வாகன தணிக்கையின் போது மடக்கி பிடித்த போலீசார்..!

0 6738
இன்னோவா காரில் ஆந்திரா நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட சடலம்..

ஆந்திராவில் இருந்து சபரிமலை சென்றுவிட்டு, காரில் சடலத்துடன் வந்த கும்பலை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்வார்பட்டி சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த இன்னோவா கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அதில் சடலம் ஒன்று இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, காரில் வந்த 7 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

சபரிமலை யாத்திரையை முடித்துக் கொண்டு கொடைக்கானல் சென்று அறை வாடகைக்கு எடுத்து மது அருந்திய போது, போதையின் உச்சத்தில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்ட நிலையில், நாகராஜ் என்பவரை வயிற்றிலும் வாயிலும் தாக்கியதில் உயிரிழந்தாக கூறப்படுகிறது. அவரது சடலத்தை காரில் ஏற்றிக் கொண்டு ஆந்திரா புறப்பட்ட நிலையில், போலீசாரிடம் சிக்கி இருக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments