உக்ரைனை தாக்கினால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்: ரஷ்யாவுக்கு G7 நாடுகள் எச்சரிக்கை.!

உக்ரைனுக்கு எதிராக ஏதாவது ராணுவ நடவடிக்கைகளில் ரஷ்யா இறங்கினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என G7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
உக்ரைனை ஒட்டிய தனது எல்லையில் ரஷ்யா ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அடுத்த மாதம் உக்ரைனை தாக்கி ரஷ்யா ஆக்கிரமிக்கலாம் எனவும் அமெரிக்க உளவுத் துறை தகவல் வெளியிட்டது.
இதை அடுத்து அங்கு தனது படைகளை குவிப்பதை ரஷ்யா வாபஸ் பெற வேண்டும் என G7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இதை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் உக்ரைனை தாக்கப்போவதாக கூறப்படுவதை மறுத்துள்ள ரஷ்யா தங்களது எல்லைக்குள் மட்டுமே ராணுவ நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்துள்ளது.
Comments