அமெரிக்காவில் 6 மாகாணங்களில் சூறாவளிகள் தாக்கியதில் 100 பேர் வரை பலி

0 2777

அமெரிக்காவின் 6 மாகாணங்களில் சூறாவளி தாக்கியதால் 100 பேர் வரை உயிரிழந்த நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த வெள்ளிகிழமையன்று அர்கன்சாஸ், கென்டக்கி, மிசிசிபி, டென்னிசி உள்ளிட்ட மாகாணங்களில் சுமார் 30 முறை சூறாவளிகள் தாக்கியதை அடுத்து,  கட்டிடங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன.

5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் இதுவரை காணாத வகையில் அமெரிக்காவில் தாக்கிய வலிமையான சூறாவளிகளால் பெரும் பேரிடர் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும், கால நிலை மாற்றத்தின் விளைவாக தீவிர சூறாவளிகள் உருவாகியிருக்கலாம் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments