கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 50சவரன் தங்க நகை, 12கிலோ வெள்ளி, 23ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

0 2150

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி அருகே, வீட்டின் கதவை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கானாங்காடு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணா, கடந்த 4-ம் தேதி தனது தாய் வீட்டிற்கு சென்று திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவை உடைக்கப்பட்டு, 50 சவரன் தங்க நகை, 12 கிலோ வெள்ளி, 23 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ராஜேஷ்கண்ணா அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments