இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு ; மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38ஆக உயர்வு

0 2878
இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு

நாட்டில் மேலும் 5 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் இத்தாலியில் இருந்து சண்டிகர் வந்த 20 வயது இளைஞருக்கும், அயர்லாந்தில் இருந்து ஆந்திரா வந்த 34 வயது நபருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலங்களின் சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும், மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஒருவருக்கும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து கர்நாடகா வந்த நபருக்கும், பிரிட்டனில் இருந்து கேரளாவின் கொச்சி வந்தவருக்கும் புதிய வகை வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments