மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்று மோதியதில் ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

0 2580

கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் அருகே மதுபோதையில் தாறுமாறாக ஓட்டிச் செல்லப்பட்ட கார் மோதியதில், சாலையில் நின்று கொண்டிருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சின்னியம்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினரான ரேணுகா என்பவரின் கணவர் வரதராஜுலு, குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடிய நிலையில், சிட்டி யூனியன் வங்கி அருகே சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த நபர் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின்னரும் நிற்காத அந்த கார், அருகே இருந்த வாழை இலை விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்த நிலையில், அங்கிருந்த 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, காரை ஒட்டி வந்த நபரை பிடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments