மனைவி அழகாக இருப்பதாக கூறி வீட்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்தல்: கணவனின் கொடுமை தாளாமல் மனைவி தற்கொலை

0 5883

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அழகாக இருப்பதாக கூறி காதல் மனைவியை வீட்டுக்குள் அடைத்து வைத்து கணவன் துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், சந்தேகத்தீயின் கொடுமை தாளாமல் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

4 ஆண்டுகளுக்கு முன் வினய் என்பவரும், சங்கீதா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் இருந்தே, மனைவியை சந்தேகக் கண்ணுடன் பார்க்க ஆரம்பித்த வினய், வாட்ஸ் அப் சேட்டுகளை பார்ப்பது, கால் ஹிஸ்டரியை சோதிப்பது போன்ற தனிமனித உரிமை மீறல் வேலைகளை அடிக்கடி செய்துவந்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களாக, சங்கீதாவை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து, வெளியே செல்லக்கூடாது, யாரிடமும் பேசக்கூடாது என துன்புறுத்தியதாக சொல்லப்படும் நிலையில், சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சங்கீதா எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார், கணவர் வினய்யை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments