சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த 9 பேர் கைது

0 1840
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த 9 பேர் கைது

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், போதை பொருட்களை விற்பனை செய்து வந்த 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆர்.கே.நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், போதை பொருட்களை விற்பனை செய்வதாக, வந்த ரகசிய தகவலின் பேரில், தேடுதலில் ஈடுபட்ட போலீசார், மூலக்கொத்தளம் மயானத்தில் இளைஞர்கள் போதை ஊசி விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, பிரபு, பாலாஜி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

மேலும், ஆந்திராவை சேர்ந்த அர்ஷா, விஜய் ஆகிய இரண்டு போதை பொருள் விற்பனையாளர்களை தொடர்பு கொண்ட போலீசார், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு போதை மாத்திரைகள் கொண்டு வரும்படி வரவழைத்து, அவர்களையும் கைது செய்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments