பெட்ரோல் பங்க் ஊழியரை இளைஞன் அரிவளால் விரட்டி விரட்டி தாக்கிய சிசிடிவி காட்சிகள்

0 2470

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் முன்பகை காரணமாக, பெட்ரோல் பங்க் ஊழியரை இளைஞன் ஒருவன் அரிவளால் விரட்டி விரட்டி வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல் பங்க் ஊழியரான மணிகண்டன் அவனது நண்பன் ஆதித்யா என்பவனது செல்போனை வாங்கி பயன்படுத்தியிருக்கிறான். செல்போன் கீழே விழுந்து உடைந்துவிடவே, வேறொரு செல்போன் வாங்கித் தருவதாக கூறிய மணிகண்டன் நீண்ட நாட்களாக வாங்கித் தராமல் ஏமாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஆதித்யாவுக்கு ஆதரவாக அவனது நண்பன் வருண்குமார் என்பவன், மணிகண்டன் மீது தாக்குதல் நடத்தியுள்ளான்.

சம்பவத்தன்று மணிகண்டன் பெட்ரோல் பங்கில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது, பைக்கில் வந்த வருண்குமார் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாக்கத் தொடங்கினான்.

படுகாயங்களுடன் மணிகண்டன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்தும், தாக்குதல் நடத்தியவன் விட்டுச் சென்ற பைக்கை பறிமுதல் செய்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments