தீராத தலைவலி தீர்க்க சிறப்பு பூஜை: பூசாரி கரும்பால் தலையில் அடித்ததில் பெண் உயிரிழப்பு.!

0 2797

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தலைவலி குணமாக வேண்டி சிறப்பு பூஜை என்ற பெயரில் கோவிலுக்கு சென்ற பெண் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னராய்பட்டணா டவுன் பகுதியை சேர்ந்த பார்வதி கடந்த சில நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், அருகே இருந்த அம்மன் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அங்கிருந்த பூசாரி மஞ்சுநாதன், சிறப்பு பூஜை செய்தால் தலைவலி குணமாகிவிடும் என கூறியதை அடுத்து அவரும் அதை பின்பற்றியுள்ளார். அப்போது பூசாரி கரும்பால் தலையில் பலமாக அடித்ததில் பார்வதி படுகாயமடைந்து இறந்ததாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments