ஒமைக்ரான் வைரசை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது ; கர்நாடக அரசின் மரபியல் கண்காணிப்பு குழு உறுப்பினர் எச்சரிக்கை

0 1773
ஒமைக்ரான் வைரசை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது

தீவிர உருமாற்றத்துடன் வந்துள்ள ஒமைக்ரான் வைரசை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அது மேலும் தீவிரத் தன்மையுடன் பரவும் என கர்நாடக அரசின் மரபியல் கண்காணிப்பு குழு உறுப்பினர் விஷால் ராவ் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் தொற்று பாதித்தவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாக வெளியாகும் தகவல்களை நம்பத் தேவையில்லை என்றும் ஒமைக்ரானின் தீவிரத்தன்மை குறித்த முழுமையான தகவல்கள் இது வரை நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற பூஸ்டர் டோஸ் அவசியம் என கருத்து தெரிவித்துள்ளார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments