தேவாலயத்துக்குள் பாதிரியாரை பட்டாக் கத்தியுடன் விரட்டிய மர்ம ஆசாமி.. போலீசார் வலைவீச்சு.!

0 1877

கர்நாடக மாநிலத்தில், பட்டாக் கத்தியுடன் பாதிரியாரை விரட்டிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

பெல்காம் நகரில் உள்ள தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் தலைமை பாதிரியார் பிரான்சிஸ் டிசோசா-வை நோக்கி பட்டாக்கத்தியுடன் பாய்ந்தான். தலை தெறிக்க ஓடிய பாதிரியாரை துரத்திச் சென்ற மர்ம ஆசாமி, பின்னர் அங்கிருந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினான்.

பெல்காம் நகரில் நாளை தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரில் மத மாற்றத்துக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments