கனமழையால் அதிகரித்துள்ள நிலத்தடி நீர்மட்டம்.. அடி பம்ப்பில் இருந்து தாமாக பொங்கி வழியும் தண்ணீர்..!

0 3233
அடி பம்ப்பில் இருந்து தாமாக பொங்கி வழியும் தண்ணீர்..!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அடிகுழாயில் தாமாக வெளியேறும் தண்ணீரை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. சாணார்பட்டி அடுத்த சாமிநாதபுரம் சர்க்கரை ராவுத்தர் குளம் அருகே ஆழ்துளை கிணறு போடப்பட்டு, அதன் மேற்பகுதியில் அடி குழாய் எனப்படும் கைப்பம்ப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தாமாகவே தண்ணீர் பொங்கி வெளியேறி வருகிறது. கனமழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அழுத்தம் காரணமாக ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேறுவதாகக் கூறப்படும் நிலையில், அப்பகுதி மக்கள் தண்ணீர் வெளியேற்றத்தை வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments