உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் ஊடுருவினால் அதற்கு ரஷ்யா பயங்கர விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் ; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

0 1782
உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் ஊடுருவினால் அதற்கு ரஷ்யா பயங்கர விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்

உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் ஊடுருவினால் அதற்கு ரஷ்யா பயங்கர விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிக் கொண்டதிலிருந்தே இரு நாடுகளுக்கும் பகை நீடிக்கிறது. எல்லையில் ஆயிரக்கணக்கான படைவீரர்களை ரஷ்யா குவித்துள்ளதால் பெரிய அளவிலான தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உக்ரைன் தெரிவித்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், ரஷ்யப் படையெடுப்பைத் தடுக்க உக்ரைனுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்படுமா எனச் செய்தியாளர்கள் வினவினர்.

படைகளை அனுப்பும் எண்ணமில்லை எனப் பதிலளித்த பைடன், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அதன் எதிர்விளைவாக ரஷ்யாவின் பொருளாதாரம் பேரழிவுக்குள்ளாகும் என அதிபர் புடினிடம் தெளிவாகக் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments