மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரில் ஒருவன் கைது..!

மதுரையில் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரில், ஒருவனை போலீசார் கைது செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் தனியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து பணம், செல்போன், நகை உள்ளிட்டவைகளை பறித்து வந்த கும்பலை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து திருமங்கலம் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ரகசிய தகவலின் பேரில், முக்கிய குற்றவாளி முத்து முருகன் என்பவனை நேற்று கைது செய்த போலீசார், அவனிடமிருந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி சென்ற 3 சிறார்களை தேடி வருகின்றனர்.
Comments