சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2866

வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக வரும் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், வரும் செவ்வாய்கிழமை வரை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தென் மாவட்டங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்த வானிலை மையம், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments