பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக பெய்த மழை

0 1564

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு பரவலாக மழை பதிவானது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

இதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வடகிழக்கு பருவகாற்று காரணமாக தமிழகத்தில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments