திருவள்ளூரில் அரசுப்பேருந்து உட்பட 2 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பெண்கள் உட்பட 20க்கும் அதிகமானோர் படுகாயம்.!

0 1974

திருவள்ளூரில் அரசுப்பேருந்து உட்பட 2 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பெண்கள் உட்பட 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி வந்த தனியார் நிறுவன பேருந்து முன்னே சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது செங்கல்பட்டிலிருந்து எதிரே வந்த அரசுப்பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்களை சகபயணிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில் குறுகலான சாலையை விரிவாக்கம் செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments