அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளிப் புயலில் 84 பேர் உயிரிழப்பு.!

0 2154

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளிப் புயலில் 84 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய அதிபர் ஜோ பைடன், மீட்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார். 

அமெரிக்காவின் இல்லினாய்ஸ், மிஸ்சோரி , டென்னிஸ்ஸி , அர்கான்சாஸ், மிஸிசிப்பி உள்ளிட்ட 7 மாகாணங்களை வரலாறு காணாத சூறாவளிக் காற்று புரட்டிப் போட்டது. கென்டக்கி மாகாணத்தில் மட்டும் ஒரே இரவில் 18 முறை சூறாவளிக் காற்று தாக்கியதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மணிக்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கிட்டங்கிகள் மரங்கள் என அனைத்தும் சூறாவளிக்காற்றில் நாலாபுறம் சிதறி உருக்குலைந்தன.
புயல் காற்றில் மெழுகுவர்த்தி தொழிற்சாலையின் மேற்கூரை விழுந்த சம்பவத்தில் பணியில் இருந்த 110 பேரில், 50 பேர் வரை உயிரிழந்ததாகவும் 58 பேரை காயங்களுடன் மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அமேசான் நிறுவன கிட்டங்கியின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதா தெரிவிக்கப்பட்டு உள்ளது. கென்டக்கி மாகாணத்தில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ள அதிபர் ஜோ பைடன், மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

டென்னிசி மாகாணத்தின் Nashville நகர குடியிருப்புப் பகுதியில் ராட்சத ஒலிபெருக்கி மூலம் அபாய ஒலி எழுப்பபட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும், ஏறத்தாழ 2 லட்சம் பேர் மின்சாரமின்றி தவித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments