ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 11 வீரர்களில் கடைசி 4 வீரர்களின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!

0 1943

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 11 வீரர்களில் கடைசி 4 வீரர்களின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இன்று அவர்களுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. பிரதீப், பி.எஸ்.சவுகான், ராணா பிரதாப் தாஸ் ,மற்றும குல்தீப் சிங் உடல்களை அடையாளம் காணும் மரபணு சோதனை முடிவடைந்தது.

இதில் கேரளா மாநிலம் திரிச்சூர் அருகே உள்ள பொன்னுக்கரா பகுதியில் பிரதீப் என்ற வீரரின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதே போல் காங்கரா எனுமிடத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விவேக் குமார் என்ற வீரரின் உடலுக்கும் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன, பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments