10ம் வகுப்பு மாணவர்களை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி தலைமறைவான மற்றொரு பள்ளி மாணவர்கள்

0 6782

டெல்லியில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திவிட்டு தப்பியவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மயூர் விகார் பகுதியில் உள்ள பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேரை, மற்றொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் விரட்டித் தாக்கியதாகவும், அருகில் இருந்த பூங்காக்குள் ஓட முயன்ற 4 பேரையும் பிடித்து கத்தியால் குத்திவிட்டு தப்பியதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments