ஒமிக்ரான் வைரஸ் அச்சமூட்டிய அளவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை - மத்திய அரசு

0 2087

ஒமிக்ரான் வைரஸ் அச்சமூட்டிய அளவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் இரண்டாவது கொரோனா அலையில் இருந்து கிடைத்த அனுபவத்தால் ஒமிக்ரான் ஆரம்ப நிலையிலேயே பரவாமல் தடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரானால் பொருளாதார பாதிப்பும் அதிகளவில் இருக்காது என்று நிதியமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வில் தெரிவித்துள்ளது.தடுப்பூசி இயக்கம் வேகம் பெற்றுவிட்ட நிலையில் ஒமிக்ரான் பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆயினும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடமும் பரவக்கூடிய ஒமிக்ரான் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments