நாமக்கல்லில் கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல்..!

0 2467

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. காட்டூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் நடத்தி வரும் மளிகைக் கடையில் போலீசார் நடத்திய சோதனையில் 100கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் கொடுத்த தகவலின் பேரில், சேலம் சாலையில் சென்ற கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 500கிலோ குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2பேரைக் கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments