புதுக்கோட்டையில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 2 பேர் உயிரிழப்பு..!

0 2185

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 2பேர் உயிரிழந்தனர்.

காரைக்குடியிலிருந்து ஈரோடு நோக்கி சென்ற அந்தப் பேருந்து, பாம்பாற்றுப் பாலம் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் தீப்பிடித்ததில், பேருந்திலும் தீப்பற்றியது. இதனைக் கண்ட பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கினர்.

சற்று நேரத்தில் பேருந்து முழுமையாக எரிந்து சேதமடைந்தது.தகவலின் பேரில் அங்கு வந்த திருமயம் தீயணைப்புத்துறையினர் போராடித் தீயை அணைத்தனர். விபத்து காரணமாக திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments