தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் 

0 21283

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக, இன்று கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

நாளை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

14 ஆம் தேதி அன்று ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், 15 ஆம் தேதி அன்று தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments