தனி ஸ்டைல், நடிப்பு, வசன உச்சரிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.. அபூர்வ ராகங்கள் தொடங்கி 46 ஆண்டுக் கால திரைப்பயணத்தில் ரஜினிகாந்த்

0 5785

நடிகர் ரஜினிகாந்திற்கு இன்று 71-வது பிறந்தநாள். அபூர்வ ராகங்கள் முதல் அண்ணாத்த வரையிலான ரஜினியின் 45-ஆண்டு திரையுலகப் பயணம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...

1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் இந்தக் காட்சியில் தொடங்கிய ரஜினியின் திரையுலகப் பயணம் இன்று வரை வெற்றிக் கொடி கட்டிப் பறந்து வருகிறது. ஆரம்பத்தில் வில்லனாகவும், குணச்சித்திர பாத்திரங்களிலும், இரண்டாவது நாயகனாகவும் நடித்து வந்த ரஜினிக்கு திருப்பு முனையாக அமைந்தவை புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, பைரவி போன்ற படங்கள்...

தொடர்ந்து இந்தியில் அமிதாப் நடித்த வெற்றிப் படங்கள் ரஜினியை வைத்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றன.

ரஜினியின் வசன உச்சரிப்பு, ஸ்டைல் ,ஸ்டன்ட், சுறுசுறுப்பு திரையரங்குகளில் ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெற்றுத் தந்தன. முரட்டுக்காளை, முள்ளும் மலரும் , தளபதி, ராகவேந்திரர் போன்ற படங்களில் தனது நடிப்பில் வித்தியாசத்தை வெளிப்படுத்தினார் ரஜினி.

ரஜினியின் படங்கள் என்றும் மக்களை மகிழ்விக்க கூடிய வகையில் அனைத்து சுவைகளும் பொருந்திய படங்கள்...ரஜினியின் திரையுலகப் பயணம் அன்று போலவே இன்றும் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

தெலுங்கு, கன்னடம்,இந்தி, வங்காளப் படங்களில் நடித்து அந்தந்த மாநில ரசிகர்களையும் கவர்ந்தவர் ரஜினி.. இந்தியா மட்டுமின்றி ஜப்பான் போன்ற நாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments