கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற பெண்.. போலீசாரிடம் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் தற்கொலை

0 14368

தேனி மாவட்டம் கம்பத்தில் கணவரை கொலை செய்ய முயன்ற சதி வெளியே தெரிந்ததால் போலீசுக்குப் பயந்து இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த கௌதம் - புவனேஸ்வரி தம்பதிக்கு கடந்த மாதம்தான் திருமணம் முடிந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி புவனேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

விளையாட்டில் பல விருதுகள் வாங்கிய புவனேஸ்வரிக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்ததும் வற்புறுத்தலின் பேரிலேயே திருமணம் நடைபெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

கணவருடன் வாழ விரும்பாத புவனேஸ்வரி அவரை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் அதன்படி கடந்த 2ஆம் தேதி  கௌதமை தனியே அழைத்துச் சென்று கூலிப்படையினரைக் கொண்டு அவர் மீது காரை மோதவிட்டு கொலை செய்ய முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.

காரின் பதிவு எண்ணை வைத்து குற்றவாளிகளை நெருங்கி வருவதை அறிந்து பயத்தில் புவனேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments