போராட்டம் முடிந்து வந்த விவசாயிகளுக்கு விமானம் மூலம் மலர்தூவி வரவேற்பு

0 2331

டெல்லியில் போராட்டத்தை முடித்துக் கொண்டு டிராக்டர்களில் பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்ற விவசாயிகளை விமானத்தில் இருந்து மலர்களைத் தூவி வரவேற்றுள்ளனர்.

அரியானா - பஞ்சாப் எல்லையில் சம்பு என்னுமிடத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரின் ஏற்பாட்டின்படி மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சிறிய பொம்மை டிராக்டரை ஒரு சிறுவன் ஓட்டிச் சென்றான்.

டெல்லி சிங்கு எல்லையில் போராடிய விவசாயிகளுக்கு ஓராண்டாக இலவசமாக உணவு வழங்கிய கோல்டன் ஹட் உணவகம் போராட்டக் காலத்தில் மூடப்பட்டிருந்தது. உழவர்கள் தங்கள் குடும்பத்தினர் எனக் கூறும் அந்த உணவகத்தின் உரிமையாளர் அதை மீண்டும் திறப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments