தருமபுரி அருகே சொத்து தகராறில் தந்தையைக் கொன்றுவிட்டு தலைமறைவான மகன் கைது

0 1394

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சொத்து தகராறில் தந்தையை அடித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவான மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

மாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோபால் என்பவருக்குச் சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில், இரண்டு மகள்கள் சொத்தில் பங்கு வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.

ஒரு மகள் மட்டும் சொத்தில் தனது பங்கை கேட்டுள்ளார். ஆனால் மகன் முருகேசன் அதற்கு சம்மதிக்க மறுத்து, தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான். கடந்த வியாழக்கிழமை இது தொடர்பான தகராறில், தந்தை கோபாலை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்துவிட்டு முருகேசன் தலைமறைவானான்.

கோபிநாதம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்தவனை சனிக்கிழமை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments