துறைமுகத்திலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.. உயிர் தப்பிய ஓட்டுநர்

0 1615

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தூக்க கலக்கத்தில் ஓட்டி வரப்பட்ட கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

துறைமுகத்திலிருந்து பெங்களூரு நோக்கி அட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை இசக்கி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். தூக்க கலக்கத்தில் அவர் இருந்ததாக கூறப்படும் நிலையில், எட்டையபுரம் அருகே லாரி சாலையை விட்டு இடதுபுறம் இறங்கியுள்ளது.

சட்டென சுதாரித்து அவர் லாரியை வலதுபுறம் திருப்ப முயற்சித்த போது, சாலைத் தடுப்பின் மீது ஏறி லாரி கவிழ்ந்ததாகவும், மின்கம்பத்தில் லாரி உரசியதாகவும் கூறப்படுகிறது. விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments