சமூக வலைதளங்களில் பெண்கள் பெயரில் போலிக்கணக்கு தொடங்கி, கல்லூரி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டவன் கைது..!

0 1727

சமூக வலைதளங்களில் பெண்கள் பெயரில் போலிக்கணக்கு தொடங்கி, கல்லூரி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டவனை, திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த நியாஸ், இன்ஸ்டாகிராமில் பெண்களின் போலியான புகைப்படத்தை பதிவிட்டு, பல பெண்களிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளான். இதில் பழக்கமான திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் பெண் குரலில் பேசி, நட்புடன் பழகி புகைப்படங்களை பெற்றுள்ளான்.

புகைப்படத்தை மார்பிங் செய்து, ஆபாச படமாக உருவாக்கி, மாணவிக்கு அனுப்பி, பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நியாசை கைது செய்து அவனிடம் இருந்த செல்போனை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments