மனைவி மதம் மாறிவிடுவாரோ என்ற பயத்தில் விபரீத முடிவு ; மனைவி, இரண்டு குழந்தைகளைக் கொன்று கார் ஓட்டுநர் தற்கொலை

0 2282
மனைவி, இரண்டு குழந்தைகளைக் கொன்று கார் ஓட்டுநர் தற்கொலை

கர்நாடகாவில் மனைவி மதம் மாறிவிடுவார் என்ற அச்சத்தில் அவரையும் இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, கார் ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாகல்கோட்டை மாவட்டம் சுனகா என்ற கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் கார் ஓட்டுநராகவும் அவரது மனைவி விஜயலட்சுமி வணிக வளாகம் ஒன்றில் காவலாளியாகவும் பணியாற்றி வந்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன் திடீரென மாயமான விஜயலட்சுமியை போலீசார் கண்டுபிடித்து நாகேஷிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை தூக்கில் தொங்கிய நாகேஷின் உடலையும் வாயில் நுரை தள்ளிய நிலையில் விஜயலட்சுமி மற்றும் 2 குழந்தைகளின் உடல்களையும் போலீசார் மீட்டனர். நாகேஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தில், விஜயலட்சுமியுடன் நூர்ஜஹான் என்ற பெண் பழகி வந்தார் என்றும், அவரது தனது மனைவியை மதம் மாற்ற முயற்சித்து வந்தார் என்றும் குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments