மத்திய அரசு அறிவுறுத்தினால் பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி -அமைச்சர் அன்பில் மகேஷ்

0 2392

உலக சுகாதார மையம் மற்றும் மத்திய அரசு அறிவுறுத்தினால், தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளோம், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், பாதுகாப்பற்ற கட்டடங்களில் மாணவர்களை அமர வைக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பழுதடைந்த பள்ளி கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments