மாணவர்களை வெகுவாக கவர்ந்த துப்பறியும் பிரிவில் உள்ள மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி

0 1163

சென்னை எழும்பூர் காவல்துறை அருங்காட்சியகத்தில் தமிழக காவல்துறை சார்பில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. டாபர் மேன், லாப்ரடார் வகைகளைச் சேர்ந்த 4 நாய்கள் சாகசத்தில் ஈடுபட்டதை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்த்து உற்சாகமடைந்தனர்.

வளையங்களில் தாவி குதித்தும், தரையில் வைக்கப்பட்ட பைகளில், எந்த பையில் என்னென்ன பொருட்கள் உள்ளன? என்பதை சரியாக கண்டறிந்தும் மோப்ப நாய்கள் பார்வையாளர்களை ஈர்த்தன.

கைக்குட்டைகளை முகர்ந்து பார்த்து அது யாருடையது என்பதை ஒரு மோப்ப நாய் கண்டறிந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments