சாலையில் நடந்து செல்லும் பெண் ஒருவரை, தெரு நாய் ஒன்று துரத்திச் சென்ற சிசிடிவி காட்சி

0 2444

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சாலையில் நடந்து செல்லும் பெண் ஒருவரை, தெரு நாய் ஒன்று துரத்திச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

காளிதாஸ் தொடக்கப்பள்ளி அருகே நடந்து சென்ற அந்த பெண்ணை அங்கிருந்த நாய் ஒன்று கடிப்பதற்காக ஆக்ரோஷமாக துரத்திச் சென்றது.

பயந்து போன அந்த பெண் தலைதெறிக்க ஓடிய நிலையில், கால் இடறி திடீரென கீழே விழுந்தார். அச்சமயம் ஆட்டோ ஒன்று அவ்வழியாக சென்றதால் நாய் அந்த பெண்ணை ஏதும் செய்யாமல் அங்கிருந்து ஓடிவிட்டது.

பரமக்குடி சுற்று வட்டார பகுதியில் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments