தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பட்டதாரிப் பெண்: தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேர் கைது

0 2589

இராமநாதபுரத்தில் பட்டதாரிப் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதாக தனியார் பள்ளி ஆசிரியரையும் உடந்தையாக இருந்ததாக அவனது குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த சௌமியா என்ற அந்தப் பெண், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.  அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனியார் பள்ளி ஆசிரியரான ஷேக் முகம்மது என்பவன் தன்னைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் ரீதியாக அத்துமீறினான் என்றும், திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது, ஷேக் முகம்மது, அவனது தாய், தந்தை, அவனது மாமன் என குடும்பமே சேர்ந்து மிரட்டினர் என்றும் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments