இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் - 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி., வெற்றி..!

0 3814

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்டை ஆஸ்திரேலியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 147 ரன்களுக்கு சுருண்டது. பதிலுக்கு ஆஸ்திரேலியா 425 ரன்கள் குவித்தது. 278 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 297 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

கேப்டன் ஜோ ரூட் அதிகப்பட்சமாக 89 ரன்கள் எடுத்தார். 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நேத்தன் லையான், டெஸ்டில் 400 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்தார்.

20 ரன்கள் என்ற வெற்றி இலக்கை ஆஸ்திரேலியா 6ஆவது ஓவரில் எட்டியது. முதல் இன்னிங்ஸில் அதிரடியாக 152 ரன்கள் விலாசிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகானகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments