அமெரிக்காவில் உச்சத்தை எட்டிய பணவீக்க விகிதம்

0 4215

அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத வகையில் 6 புள்ளி 8 சதவீதம் அதிகரித்து உச்சத்தை எட்டியுள்ளது.

எரிவாயு, உணவு, இருப்பிடம் உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்டதால் இந்த விளைவு ஏற்பட்டிருப்பதாக அண்மைகால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உலகம் கொரோனா பேரிடரில் இருந்து மீண்டு வரும் போது எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தத்தை புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுவதாக கூறியுள்ளார். 

கொரோனா சூழ்நிலைகளால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தேக்கமே பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments